தக் லைஃப் படத்தில் சிம்புவுக்கு அவ்ளோ முக்கியத்துவம் இருக்கா?.. வெளியான தகவல்!

vinoth
செவ்வாய், 18 மார்ச் 2025 (15:28 IST)
பொன்னியின் செல்வன் படத்தின் மூலமாக பல ஆண்டுகளுக்குப் பிறகு கமர்ஷியல் வெற்றியைப் பெற்ற இயக்குனர் மணிரத்னம் அடுத்து இப்போது கமல்ஹாசனை வைத்து தக் லைஃப் படத்தை இயக்ககியுள்ளார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. படம் ஜூன் மாதம் 5 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இதற்கிடையில் படம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படம் கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் ஓடுமளவுக்கு எடிட் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் படத்தில் கமல்ஹாசனுக்கு நிகரான முக்கியத்துவம் சிம்புவுக்கும் கொடுக்கப்பட்டுள்ளதாம். கிட்டத்தட்ட படத்தில் கமலுக்கு நிகரான நேரம் சிம்புவுக்கும் காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாம். அதே போல இருவரும் இணைந்து நடனமாடும் பாடல் காட்சி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments