Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த ஆண்டின் முதல் பிளாக்பஸ்டர் ‘டிராகன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றி வெளியான தகவல்!

vinoth
செவ்வாய், 18 மார்ச் 2025 (15:23 IST)
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள டிராகன் படம் கடந்த மாதம் 21 ஆம் தேதி ரிலீஸாகி பெருவாரியான வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கடாயு லோஹர் மற்றும் மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

லவ் டுடே வெற்றியை அதிர்ஷ்டத்தின் மூலம் கிடைத்த வெற்றி அல்ல என்று ப்ரதீப் ரங்கநாதன் ‘டிராகன்’ படம் மூலமாக மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டியுள்ளார். படம் தமிழகத்தில் மட்டுமின்றி உலகம் முழுவதும் வசூல் வேட்டையை நிகழ்த்தி வருகிறது. இதுவரை இந்த படம் 120 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டின் முதல் பிளாக்பஸ்டர் படமாக டிராகன் உருவாகியுள்ளது.

இந்நிலையில் டிராகன் படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. வரும் 21 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்த படம் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு பிடித்தமானதை பெற்றுவிட்டேன்.. விவாகரத்துக்கு பின் ஏஆர் ரஹ்மான் செய்த செயல்..!

சென்னையில் நடிகர் பாபிசிம்ஹா கார் விபத்து. ஒரு பெண் உள்பட 3 பேர் படுகாயம்..

இன்னும் எத்தனை திருமணம் செய்வார் கமல்ஹாசன்.. அவரே அளித்த பதில்..!

பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் அப்பாஸ்!

சூரி நடிக்கும் ‘மண்டாடி’.. வித்தியாசமான தலைப்பின் அர்த்தம் இதுதானா?

அடுத்த கட்டுரையில்
Show comments