சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் பத்து தல . அந்த படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அதன் பின்னர் அவர் கமல்ஹாசனோடு இணைந்து மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் அவர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்துக்கான வேலைகளும் பல மாதங்களாக நடந்து வருகின்றன. இதற்கிடையில் சிம்பு திடீரென்று இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்த படத்துக்கான முதல் லுக் போட்டோஷூட்டும் சில வாரங்களுக்கு முன்னர் நடந்தது. தற்போது டிராகன் படத்தின் ரிலீஸ் வேலைகளில் பிஸியாக இருக்கும் அஷ்வத் சிம்பு படம் குறித்த அப்டேட்டை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் சிம்புவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு “விரைவில்” எனத் தெரிவித்துள்ளார். டிராகன் திரைப்படம் பிப்ரவரி 21 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அதன் பின்னர் சிம்பு படத்துக்கான வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.