Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காட்டில் வெடிமருந்துகளைப் பயன்படுத்தி விலங்குகளை துன்புறுத்துகிறார்கள்… காந்தாரா படக்குழு மேல் எழுந்த குற்றச்சாட்டு!

Advertiesment
காட்டில் வெடிமருந்துகளைப் பயன்படுத்தி விலங்குகளை துன்புறுத்துகிறார்கள்… காந்தாரா படக்குழு மேல் எழுந்த குற்றச்சாட்டு!

vinoth

, செவ்வாய், 21 ஜனவரி 2025 (14:49 IST)
கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸான காந்தாரா திரைப்படம் பாராட்டுகளைப் பெற்று  இந்தியா முழுவதும் வசூலில் கலக்கியது. 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது. ஆனால் இந்த திரைப்படத்தில் காடுகளில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு எதிரான கருத்துகள் உள்ளதாக இடதுசாரியினர் கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.

இதையடுத்து இப்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இரண்டாம் பாகம் என சொன்னாலும் காந்தாரா கதையின் முன்கதைதான் படமாக்குகிறார்கள். படத்துக்கு காந்தாரா –சேப்டர் 1 எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது பற்றி பேசிய இயக்குனர் ரிஷப் ஷெட்டி “காந்தாரா படம்தான் இரண்டாம் பாகம்.  இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கும் கதைதான் அடுத்த பாகத்தில் சொல்லப்பட உள்ளது. இந்த படத்தில் தெய்வத்தின் பின்னணி பற்றி சொல்லப்படும்.” எனக் கூறியிருந்தார்.

தற்போது கர்நாடகாவின் கவுகுடா வனப்பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் படக்குழுவினர் மீது அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளனர். அதில் “படப்பிடிப்புக்காக வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டு காடு சேதமாக்கப்படுவதாகவும், விலங்குகள் துன்புறுத்தப்படுவதாகவும்” புகார் எழுந்துள்ளது. இதையயடுத்து தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குனர்& கதாநாயகன் ரிஷப் ஷெட்டி மீது  வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த சிரிப்பு வெடி from சந்தானம்… டிடி நெக்ஸ்ட் லெவஸ் போஸ்டரை வெளியிட்ட படக்குழு!