சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் சில மாதங்கள் ஐதராபாத்தில் செட் அமைத்துப் படமாக்கப்பட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படம் ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாகி வருவதால் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தற்போது ஷூட்டிங் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது.
இந்நிலையில் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன் படம் பற்றி பேசும்போது “ரஜினிகாந்தோடு நடிப்பது மிகச்சிறந்த அனுபவம். அவரிடம் இருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடிகிறது” எனக் கூறியுள்ளார். கிறிஸ்துமஸ் நாளில் கூட கூலி படத்தின் ஷூட்டிங் நடப்பதாகவும் அது உற்சாகத்தை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.