Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான் கைதி 2 வில் இருப்பேனா?... அர்ஜுன் தாஸ் அளித்த பதில்!

நான் கைதி 2 வில் இருப்பேனா?... அர்ஜுன் தாஸ் அளித்த பதில்!

vinoth

, வெள்ளி, 20 டிசம்பர் 2024 (09:06 IST)
மாநகரம், கைதி ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய் மற்றும் கமல் ஆகியோர் நடிப்பில் மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களை இயக்கினார். இந்த இரு படங்களின் வெற்றி அவரை மோஸ்ட் வாண்டட் இயக்குனராக்கியது.

சமீபத்தில் மீண்டும் விஜய்யின் லியோ படத்தை இயக்கிய லோகேஷ் ரஜினி நடிப்பில் உருவாகும் கூலி படத்தை இயக்குகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்து அவர் கைதி 2 படத்தை  இயக்குவார் என சொல்லப்படுகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் கைதி முதல் பாகத்துக்கு இசையமைத்த சாம் சி எஸ் இரண்டாம் பாகத்தின் மூலம் மீண்டும் லோகேஷுடன் இணைய உள்ளதை உறுதிப் படுத்தியுள்ளார். இந்நிலையில் கைதி 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த அர்ஜுன் தாஸ் இரண்டாம் பாகத்தில் தான் இருப்பேனா என்பது குறித்து பேசியுள்ளார். அதில் “நான் இரண்டாம் பாகத்தில் இருப்பேனா என்பது லோகேஷுக்குதான் தெரியும். இருந்தால் சந்தோஷப்படுவேன்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

படப்பிடிப்பில் பிரபாஸ் காயம் அடைந்தாரா?.. ராஜாசாப் படக்குழு விளக்கம்!