Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினி பிறந்தநாளில் ஏன் ஜெயிலர் 2 ப்ரமோஷன் வீடியோ ரிலீஸாகவில்லை?

ரஜினி பிறந்தநாளில் ஏன் ஜெயிலர் 2 ப்ரமோஷன் வீடியோ ரிலீஸாகவில்லை?

vinoth

, புதன், 18 டிசம்பர் 2024 (11:48 IST)
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் வெளியான வேட்டையன் திரைப்படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. தற்போது அவர் கூலி படத்தில் நடித்து வருகிறார். அதன் பின்னர் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கவுள்ளார். அதன் பின்னர் வேறு எந்த படத்திலும் நடிக்கப் போவதில்லை என்றும் அத்துடன் நடிப்பில் இருந்து விலகவுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் ஜெயிலர் 2 பட ப்ரமோஷன் வீடியோ ஒன்று வெளியிடப்படும் என சொல்லப்பட்டது. ஆனால் அதுபோல ரிலீஸாகவில்லை.

அதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ஜெயிலர் 2 படத்தின் ப்ரமோஷன் ஷூட்டை நடத்த இருந்த போது மழை பெய்ததாலும், அனிருத் இன்னும் பின்னணி இசைப் பணியைக் கம்போஸ் செய்து கொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. அதனால்தான் இந்த தாமதம் என சொல்லப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பா ரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் பாட்டல் ராதா படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்!