Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரே இடத்தில் ஷூட்டிங்...அஜித் -விஜய் சந்திப்பு நடக்குமா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

VIJAY AJITH
, புதன், 17 ஆகஸ்ட் 2022 (15:15 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார், விஜய்யைத் தொடர்ந்து பிரபல இடத்திற்கு ஷூட்டிங்கிற்காக சென்றுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் ஹெச்.வினோத் இயக்கத்தில்,போனி கபூர் தயாரிப்பில் 3 வது முறையாக அஜித்61  என்ற படத்தில் நடித்து வருகிறார்.

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களில் வெற்றிக்குப் பின் இந்திய சினிமாவில் எதிர்பார்ப்பிற்குரிய படமாக அஜித்61 படம் உள்ளது.

இந்த நிலையில், அஜித்61 படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வந்த நிலையில், அங்குள்ள விசாகப்பட்டிணத்திற்கு அஜித் சென்றபோது,விமான  நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

அஜித்61 படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் இங்கு தான் நடக்கவுள்ளதாகவும் ஏற்கனவே இங்கு வாரிசு படத்தின் சண்டைக் காட்சிக்கான விஜய் முகாமிட்டுள்ளதால் விஜய் மற்றும் அஜித் சந்தித்துக் கொள்ள வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சினிமாவில் 47 வது ஆண்டுகள்... சூப்பர் ஸ்டார் ரஜினியின் புகைப்படம் வைரல்