Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முன்னணி நடிகையின் சுயசரிதையில் எழுதிய ..அதிர்ச்சி சம்பவங்கள்

Advertiesment
முன்னணி நடிகையின் சுயசரிதையில் எழுதிய ..அதிர்ச்சி சம்பவங்கள்
, வியாழன், 11 பிப்ரவரி 2021 (00:04 IST)
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா தனது வாழக்கை சரிதமான அன்பினிஷ்டு என்ற புத்தகத்தை எழுதி முடித்துள்ள நிலையில், அதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கடைசி உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரியங்கா சோப்ரா. அதையடுத்து அவர் விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின் பாலிவுட்டில் நுழைந்த அவர் பத்தாண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வந்தார். இப்போது

பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்கள் சீரியல்களில் நடித்து வருகிறார்.

இதையடுத்து 38 வயதாகும் பிரியங்கா சோப்ரா தனது வாழ்க்கை வரலாற்று புத்தகமான அன்பினிஷ்டு என்ற புத்தகத்தை எழுதி முடித்துள்ளார்.

இப்புத்தகத்தில்,ஒரு இயக்குநரை பட வாய்ப்புக்காகச் சந்தித்துள்ளதாகவும், அதற்கு அந்த இயக்குநர் அவரிடம்,உங்கள் மார்பகங்களைப் பெரிதாக்க வேண்டும், பின்னழகை மெருகேற்ற வேண்டுமெனக் கூறியதாகவும், இதற்காகத் தனக்குத் தெரிந்த மருத்துவரிடம் சென்றால் அவர் இதைச் சரி செய்துவிடுவதாகத் தெரிவித்ததாகவும் அவரது பேச்சு தனக்கு எரிச்சல் மூட்டியதாகக்  கூறியுள்ளார் பிரியங்கா சோப்ரா.

மேலும், சல்மான் கான் படத்தில் கவர்ச்சியாக நடனம் ஆடும் போது அப்படத்தின் தயாரிப்பாளர்,  உள்ளாடை தெரிய நடனமாட வேண்டுமென கூறிய விதம் தன் மனதைக் காயப்படுத்தியதாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்து தனது சமூகவலைதளப் பக்கத்தில் memeor unfinished என்ற தனது சுயாரிதைப் புத்தகம் குறித்துப் பகிர்ந்துகொண்ட பிரியங்கா சோப்ரா, இதிலுள்ள  ஒவ்வொரு வார்த்தையும் என் வாழ்வில் உள்ள சுயபரிசோதனை மற்றும் பிரதிபலிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பிறந்துள்ளது’ எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆஸ்கர் வாய்ப்பு நழுவிப் போன ’’இந்திய படம்’’ ! ரசிகர்கள் ஏமாற்றம்