Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண்களை வைத்து ஆபாச வீடியோ ஷூட்டிங்; லட்சங்களில் சம்பாதித்த நடிகை கைது!

Advertiesment
பெண்களை வைத்து ஆபாச வீடியோ ஷூட்டிங்; லட்சங்களில் சம்பாதித்த நடிகை கைது!
, திங்கள், 8 பிப்ரவரி 2021 (15:25 IST)
மும்பையில் பிரபல மாடல் அழகியும், நடிகையுமான கெஹானா வசிஸ்த் ஆபாச படங்கள் எடுத்ததை கண்டுபிடித்த போலீஸ் அவரை கைது செய்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்தவர் கெஹானா வசிஸ்த். பிரபல மாடலான இவர் ஆசிய அழகி போட்டியில் மிஸ் ஆசியா பிகினி பட்டம் பெற்றவர். இந்தி, மராத்தி உள்ளிட்ட சில மொழிகளில் திரைப்படங்கள் மற்றும் வெப் சிரிஸ்களிலும் இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் மும்பை விருந்தாளி பங்களா ஒன்றில் ஆபாச படங்கள் எடுக்கப்பட்டு வருவதாக மும்பை போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் ஒரு பெண் உட்ப்ட அங்கிருந்த தொழில்நுட்ப ஆட்களையும், கருவிகளையும் பறிமுதல் செய்துள்ளனர். விசாரணையில் இவற்றை செய்து வந்தது கெஹானா வசிஸ்த் என தெரிய வந்துள்ளது. இதற்காக தனி இணையதளம் அமைத்து பெண்கள் பலரை வலுக்கட்டாயமாக இந்த தொழிலில் ஈடுபடுத்தியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிக்கலாவுக்கு கார் குடுத்தது யாரு? – கொலை காண்டான அதிமுக!