Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிரிக்கெட் வீரர்கள் நாய் போன்று குரைக்கிறார்கள்..முன்னணி நடிகை டுவீட்

கிரிக்கெட் வீரர்கள் நாய் போன்று குரைக்கிறார்கள்..முன்னணி நடிகை டுவீட்
, வியாழன், 4 பிப்ரவரி 2021 (22:24 IST)
டெல்லியில் விவசாயிகள் எண்பது நாளுக்கும் மேலான தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கான இணையதளத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

அதேபோல்,டெல்லியில் நுழையமுடியாதபடி ஆணித்தடுப்பு தடுப்புச்சுவர்களும் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் நேற்று சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் இருகுறித்துப் பதிவிட்டிருந்ததாவது :

இந்தியாவின் தேசிய இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது. வெளிநாட்டில் வசிப்போர் பார்வையாளர்களாக  மட்டும் இருங்கள் பங்கேற்பாளர்களாக வேண்டாம். இந்தியர்களுக்கு இந்தியாவைப் பற்றித் தெரியும். இந்தியா ஒற்றுமையால் கட்டமைப்பட்டது எனத் தெரிவித்தார். இதே கருத்தைத்தன் சுரேஷ் ரெய்னா, லதா மங்கேஸ்கர் உள்ளிட்டோர் பதிவிட்டுள்ளனர்.

இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் இர்ஃபான் பதான் தனது டுவிட்டர் பக்கத்தில், அமெரிக்காவில் கடந்தாண்டு ஜார்ஜ் பிளாட் என்ற கறுப்பினத்தவர் வெள்ளையின போலிஸாரால் கொலை செய்யப்பட்டபோது, நம் நாடு சரியான நேரத்தில் கருத்தை தெரிவித்து  #justsay என்று கூறியுள்ளது, டெல்லி போராட்டத்திற்கு அவர் மறைமுக ஆதவரவு தெரிவிப்பது போலுள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளார்.
webdunia

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் , நாம் அனைவரும் ஒன்றாக இருக்கையில் இந்தியா வலுவாக உள்ளது.  நாட்டின் முன்னேற்றத்திற்கு விவசாயிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். எனவே  விவசாயிகளின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவேண்டிய நேரம் இது. அவரவர்களுக்கு உரிய ரோல்களை சரியாக செய்வார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை கங்கனா ரணாவத், ஏன், இந்த கிரிக்கெட் வீரர்கள் ஏன் டோபியின் அருகில் நிற்கும் நாய் போல் குரைக்கிறார்கள்…விவசாயிகள் நன்மைக்காக கொண்டுவரப்பட்ட சட்டங்களை எதற்காக எதிர்க்கிறார்கள் விவசாயிகள்? இந்த மோதல்களுக்கு காரணமானவர்கள் பயங்கரவாதிகள் எனக்கடுமையாக விமர்சித்தார்.

இந்தப் பதிவை டுவிட்டர் நிறுவனம் நீக்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும், டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும்  மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வரும் ஞாயிறு அன்று ‘மாஸ்டர்’ படத்தின் ஸ்பெஷல் காட்சி: நெல்லை தியேட்டர் அறிவிப்பு!