Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்கில் போர் வீரரின் ஷேர்ஷா படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (10:20 IST)
இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஷேர்ஷா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் நடித்த பில்லா மற்றும் ஆரம்பம் ஆகிய படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன், முதன்முறையாகப் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்துள்ளார். 1999 ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற கார்கில் போரில் வீர மரணம் அடைந்த கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கைக் கதையைப் படமாக எடுக்கிறார்.

மத்திய அரசு இவருக்கு ராணுவத்தின் மிக உயரிய விருதான ‘பரம் வீர் சக்ரா’வை வழங்கி கெளரவித்தது. விக்ரம் பத்ரா வேடத்தில், ஹிந்தி நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கிறார். விக்ரம் பத்ராவின் வாழ்க்கைக் கதை, கண்டிப்பாக உங்களை ஊக்குவிக்கும். அத்துடன், உங்கள் முகத்தில் புன்னகையையும் கொண்டுவரும். இந்த கேரக்டரில் நடிக்க நான் ஆர்வமாக இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார் சித்தார்த் மல்ஹோத்ரா. தர்மா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இப்போது இதன் ரிலிஸ் தேதியை தயாரிப்பாளர் கரண் ஜோஹர் அறிவித்துள்ளார். இந்த திரைப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி ரிலிஸாக உள்ளது. இந்த திரைப்படம் நேரடியாக திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கலவையான விமர்சனங்கள் வந்தும் முதல் நாள் வசூலில் கலக்கிய எம்புரான்!

சிக்கலில் மாட்டிய வீர தீர சூரன் தயாரிப்பாளர்… விக்ரம் செய்த உதவியால் ரிலீஸான படம்!

மிஷ்கின் மேல் எந்த கோபமும் இல்லை… நான் ஏன் அப்படி பேசினேன்?- பிரபல நடிகர் விளக்கம்!

சினிமா பிரபலங்களின் துக்க நிகழ்வுகளை ஊடகங்களில் ஒளிபரப்ப வேண்டாம்: தயாரிப்பாளர் சங்கம்

விஜய் பிறந்தநாளுக்கு ‘ஜனநாயகன்’ படத்தில் இருந்து வரும் சர்ப்ரைஸ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments