Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’மாஸ்டர்’ தயாரிப்பாளரின் அடுத்த பட ஹீரோ, இயக்குனர் அறிவிப்பு!

Advertiesment
’மாஸ்டர்’ தயாரிப்பாளரின் அடுத்த பட ஹீரோ, இயக்குனர் அறிவிப்பு!
, புதன், 14 ஏப்ரல் 2021 (17:48 IST)
தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளர் பிரிட்டோ தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் அவருடைய மருமகனும் அதர்வா முரளி சகோதரருமான ஆகாஷ் முரளி நாயகனாக நடிக்க இருப்பதாகவும் பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் விஷ்ணுவர்தன் இந்த திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:
 
’மாஸ்டர்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து எங்களது XB பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது திரைப்படம் இது. பன்முக திறமை வாய்ந்த இயக்குனர் விஷ்ணுவர்தன் அவர்களுடன் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.
 
நடிகர் முரளியின் மகனும், அதர்வா முரளியின் இளைய சகோதரரான ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகிறார். இத்திரைப்படம் சம்பந்தப்பட்ட இதர நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் வெளியிடப்படும். எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் எங்கள் நலன் விரும்பிகளுக்கும் எங்களது எக்ஸ்பி பிலிம் கிரேட்டர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’
 
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது 

webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சத்யஜோதி நிறுவனத்தின் அடுத்த பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!