Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஜித்துக்காக காத்திருந்த இயக்குனர்… கடைசியில் கிடைத்தது அறிமுக நடிகர்தான்!

அஜித்துக்காக காத்திருந்த இயக்குனர்… கடைசியில் கிடைத்தது அறிமுக நடிகர்தான்!
, வியாழன், 15 ஏப்ரல் 2021 (11:39 IST)
அஜித் நடிப்பில் ஒரு வரலாற்று படத்தை இயக்க வேண்டும் எனக் காத்திருந்த இயக்குனர் விஷ்ணுவர்தனுக்கு புதுமுக நடிகரின் படத்தை இயக்கும் வாய்ப்புதான் கிடைத்துள்ளது.

அஜித்துக்கு பில்லா மற்றும் ஆரம்பம் ஆகிய இரு வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் விஷ்ணுவர்தன். அவர் அதன் பின்னர் பல படங்களை இயக்கினாலும் எந்த படமும் பெரிதாக வெற்றி பெறவில்லை. இந்நிலையில் இப்போது அவர் அதர்வா தம்பி ஆகாஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்தை விஜய்யின் மாம சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.

ஆரம்பம் படத்துக்கு பின் அஜித்துக்காக வரலாற்றுக் கதை ஒன்றை எழுத்தாளர் பாலகுமாரனோடு இணைந்து எழுதினார் விஷ்ணுவர்தன். நீண்ட காலமாக அந்த கதையில் அஜித் நடிப்பார் என காத்திருந்தார். ஆனால் அந்த ஆசை நிறைவேறாததால் இப்போது இந்த முடிவை எடுத்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அருண் விஜய்யின் “பார்டர்” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு - ரிலீஸ் எப்போது?