இஸ்ரேல் போர் காரணமாக நேற்று பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்தாலும் இன்று பங்கு சந்தை மீண்டும் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
இன்று காலை பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கியவுடன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 375 புள்ளிகள் உயர்ந்து 65 ஆயிரத்து 889 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
அதேபோல் தேசிய பங்கு சந்தை யான நிப்டி 120 புள்ளிகள் உயர்ந்து 19 ஆயிரத்து 623 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை போர் காரணமாக ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்பதால் புதிதாக முதலீடு செய்பவர்கள் சிறிது காலம் காத்திருக்க வேண்டும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேபோல் ஏற்கனவே முதலீட்டு செய்தவர்களும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.