Publish Date: Thu, 05 Oct 2023 (11:24 IST)
Updated Date: Thu, 05 Oct 2023 (11:27 IST)
இந்திய பங்குச்சந்தையின் சென்செக்ஸ் நேற்று 500 புள்ளிகளுக்கும் மேல் சரிந்த நிலையில் இன்று அதே 500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போது உயர்வில் இருந்த நிலையில் சற்றுமுன் இந்திய பங்குச் சந்தை 518 புள்ளிகள் உயர்ந்து 65 ஆயிரத்து 749 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 139 புள்ளிகள் அதிகரித்து 19,574 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து பங்குச்சந்தை சரிந்து வந்தாலும் இன்று உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றும் மேலும் பங்குச்சந்தை இன்னும் ஒரு சில நாட்களில் மீண்டும் உயர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.