நேற்று காந்தி ஜெயந்தி விடுமுறை என்பதால் பங்குச்சந்தைக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்கள் ஆகவே பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் 415 புள்ளிகள் சென்செக்ஸ் சரிந்து 65 ஆயிரத்து 413 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
அதேபோல் நிப்டி 135 புள்ளிகள் சரிந்து 19 ஆயிரத்து 53 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இன்றைய வர்த்தகத்தில் பெடரல் பேங்க் ,வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்றத்திலும், ஓஎன்ஜிசி, ஹிண்டால்கோ போன்ற பங்குகள் சரிவில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன