Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துணிவு & வாரிசு திரைப்படத்தோடு வெளியான சாந்தனுவின் ராவண கோட்டம் டிரைலர்!

துணிவு & வாரிசு திரைப்படத்தோடு வெளியான சாந்தனுவின் ராவண கோட்டம் டிரைலர்!
, புதன், 11 ஜனவரி 2023 (15:10 IST)
மதயானைக் கூட்டம் திரைப்படம் வெளியாகி 8 ஆண்டுகள் கழிந்த  நிலையில் இயக்குனர் விக்ரம் சுகுமாறன் தனது அடுத்த படத்தை முடித்துள்ளார். இந்த படத்திற்கு 'இராவண கோட்டம்' என்ற வித்தியாசமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் நாயகனாக இயக்குனர் கே.பாக்யராஜின் மகன் சாந்தனு நடிக்கவுள்ளார். 

சினிமாவில் 15 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தாலும் சாந்தனுவால் இன்னும் ஒரு பேர்சொல்லும் வெற்றியைப் பெற முடியவில்லை. இந்நிலையில் இந்த படத்தை பெரிதும் நம்பி அவர் கடின உழைப்பை செலுத்தி இந்த படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்நிலையில் விரைவில் ரிலீஸ் ஆக உள்ள இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ள துணிவு மற்றும் வாரிசு ஆகிய படங்களோடு வெளியாகியுள்ளது. ராவணக் கோட்டம் திரைப்படத்தின் புதிய போஸ்டரும் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாரிசு படம் எப்படி இருக்கிறது? ரசிகர்கள் கூறுவது என்ன?