விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் கொம்புசீவி என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சரத்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தேனி உள்ளிட்ட பகுதிகளில் ஷூட்டிங் நடந்து முடிந்தது.
1996 வாக்கில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகள் மையமாக வைத்து இந்த படத்தை பொன்ராம் உருவாக்கி வருகிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கிய படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.
இதையடுத்து படக்குழு படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. சண்முக பாண்டியனின் முந்தைய படமான படை தலைவன் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் நல்ல வசூலை ஈட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.