ஆர் ஆர் ஆர் படத்துக்குப் பிறகு ராம்சரண் நடிப்பில் உருவான கேம்சேஞ்சர் படத்தை ஷங்கர் இயக்க தில் ராஜூ தயாரித்து சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸ் செய்தனர். இந்த படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியுள்ளார். படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடித்துள்ளார். தமன் முதல் முதலாக ஷங்கர் படத்துக்கு இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் மிக அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி ரிலீஸானது. முதல் நாளில் மிகப்பெரிய ஓப்பனிங் இருந்தும் அதன் பின்னர் கலவையான விமர்சனங்களால் வசூலில் பெரிய வீழ்ச்சி இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் படம் பற்றி வெளியான் நெகட்டிவ் விமர்சனங்கள் பற்றி இயக்குனர் ஷங்கர் பதிலளித்துள்ளார். அதில் “விமர்சனங்களைப் படிக்கவில்லை. என் காதுக்கு வரும் விமர்சனங்களைக் கேட்டுக்கொண்டேன். அவை பாசிட்டிவ்வாகதான் உள்ளன.” எனக் கூறியுள்ளார். தொடர்ந்து ஷங்கரின் படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அடிவாங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.