நேற்று வெளியான கேம் சேஞ்சர் படத்தின் வசூல் ரூ.186 கோடி என வெளியான தகவல் குறித்து சர்ச்சைகள் கிளம்பியுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், எஸ்.ஜே.சூர்யா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகியுள்ள படம் கேம் சேஞ்சர். இந்த படம் தெலுங்கில் ராம்சரண் ரசிகர்களால் பெரும் வரவேற்பை பெற்றாலும் பிற மொழிகளில் ஓரளவு சுமாரான வரவேற்பையே பெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் கேம் சேஞ்சர் படம் உலக அளவில் ரூ186 கோடி வசூலித்ததாக வெளியான போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சினிமா உலகை நோட்டமிட்டு வரும் சிலர் இந்த படம் அவ்வளவு ஓடவில்லை என்றும் முதல் நாள் வசூல் ரூ.85 கோடி அளவிலேயே உள்ளதாகவும், ஆனால் படத்தை பூஸ்ட் செய்ய போலியான பாக்ஸ் ஆபிஸ் தகவலை வெளியிட்டுள்ளதாகவும் கூறினர்.
இதை தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் படக்குழுவை கலாய்த்து #GameChangerPosterScam என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்யத் தொடங்கியுள்ளனர். தெலுங்கு சினிமாவில் சமீபத்தில் வெளியான அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 வசூலை முறியடித்ததாக காட்ட வேண்டும் என்பதற்காகவே கேம் சேஞ்சரின் வசூல் மிகைப்படுத்தி காட்டப்பட்டிருப்பதாக அல்லு அர்ஜுன் ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
Edit by Prasanth.K