மீண்டும் ஷங்கர் - விஜய் கூட்டணி? - ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

Webdunia
ஞாயிறு, 15 டிசம்பர் 2019 (14:51 IST)
நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் புதிய படம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் ஷங்கர் இயத்தில் விஜய் நடித்து வெளியான படம் “நண்பன்”. இந்தியில் அமீர்கான் நடித்த ‘3 இடியட்ஸ்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்கான இந்த படம் தமிழகம் முழுவதும் ஹிட் அடித்தது. ஆனால் அதற்கு பிறகு இருவரும் இணைந்து வேறு படங்கள் வெளியாகவில்லை.

பிரம்மாண்டமான திரைப்படங்களை இயக்கும் ஷங்கர் விஜய்யை வைத்து ரீமேக் அல்லாத தமிழ்படம் ஒன்று எடுக்க வேண்டும் என்பது விஜய் ரசிகர்களின் ஆசையாக இருந்து வருகிறது. இந்நிலையில் விஜய்யை வைத்து படம் இயக்குவீர்களா? என்று ஒரு நிகழ்ச்சியில் ஷங்கரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஷங்கர் நடிகர் விஜய்யை வைத்து படம் எடுக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார். தற்போது ஷங்கர் கமல்ஹாசனை வைத்து ‘இந்தியன் 2’ திரைப்படம் இயக்குவதில் பிஸியாக இருக்கிறார். நடிகர் விஜய் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்த பட பணிகள் முடிந்ததும் இருவரும் இணைய வாய்ப்பிருப்பதாக பேசிக்கொள்ளப்படுகிறது. அப்படி இணைந்தால் அது கண்டிப்பாக மிக பிரம்மாண்டமான படமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?

அஜித் படத்தை மீண்டும் இயக்குகிறாரா சிறுத்தை சிவா? மலேசியாவில் திடீர் சந்திப்பு..!

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

அடுத்த கட்டுரையில்
Show comments