Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய அணியுடன் சிவகார்த்திகேயன் கூட்டணி!: நாளை நேரலை!

Advertiesment
Cinema
, சனி, 14 டிசம்பர் 2019 (16:44 IST)
இந்தியா  - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் தொடரில் சிவகார்த்திகேயனும் இணைய இருக்கிறார்.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையேயான டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை சென்னையில் நடக்க இருக்கிறது. இதற்காக நேற்றே சென்னை வந்துவிட்ட இரு அணி கிரிக்கெட் வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தொடரில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொள்ள இருக்கிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியுள்ள ‘ஹீரோ’ திரைப்படம் 20ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயனிடம் ரசிகர்கள் கேட்க விரும்பும் கேள்விகளை ட்விட்டர் மூலம் கேட்கலாம் என்றும், அதற்கு சிவகார்த்திகேயன் நேரலையில் பதில் அளிப்பார் எனவும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளம் தெரிவித்துள்ளது.

நாளை தமிழ் வர்ணனையாளர்களுடன் சிவகார்த்திகேயன் இணைந்து பேச இருப்பதும், இந்திய அணியின் அபார ஆட்டமும் ஒன்றாக சேர்ந்து வருவதால் அதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் அப்படி சொல்லவேயில்லை! - ஆண்டவரிடம் சரணடைந்த லாரன்ஸ்!