Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஷங்கரால் வாய்ப்பை இழந்த ராம்சரண் தேஜா!

ஷங்கரால் வாய்ப்பை இழந்த ராம்சரண் தேஜா!
, வியாழன், 16 செப்டம்பர் 2021 (10:48 IST)
இயக்குனர் ஷங்கர் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக ராம்சரண் தேஜா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென அந்த படத்தை கைவிட்டுவிட்டு தற்போது ராம்சரண் தேஜா நடித்த உள்ள தெலுங்கு படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும் தில் ராஜு தயாரிக்க உள்ளார். இந்நிலையில் கியாரா அத்வானி அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். லைகா உடனான பிரச்சனைகளை முடித்துவிட்டு ஷங்கர் ராம்சரண் தேஜாவின் படத்தை தற்போது தொடங்க உள்ளார்.

இந்நிலையில் படத்தில் ராம்சரணின் தோற்றம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக போட்டோஷுட்டை நேற்று நடத்தி முடித்துள்ளார் ஷங்கர். விரைவில் அதிகாரப்பூர்வ படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்த படம் முடியும் வரை வேறு எந்த படத்திலும் நடிக்கக் கூடாது என ஷங்கர் ராம்சரணுக்கு கண்டீஷன் போட்டுவிட்டாராம். இதனால் தான் ஏற்கனவே ஒப்பந்தமாகிய ஒரு படத்தை வேண்டாம் என ஒதுக்கிவிட்டாராம் ராம்சரண். ஏற்கனவே ராஜமௌலி படத்துக்காக இரண்டு ஆண்டுகள் எந்த படத்திலும் ராம் சரண் நடிக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்வைவர் நிகழ்ச்சிக்காக அர்ஜுனுக்கு இவ்வளவு சம்பளமா?