பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தந்தை குமரி அனந்தன் நேற்று காலமான நிலையில் அவருடைய மறைவுக்கு பல அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர். குறிப்பாக அரசு மரியாதை உடன் அவரது உடல் இறுதி மரியாதை செய்யப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், குமரி ஆனந்தன் மறைவிற்கு தனது சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட நிலையில் அந்த அறிக்கைக்கு நன்றி கூறி தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் பக்கத்தீல் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
மரியாதைக்குரிய தமிழக வெற்றி கழகத்தின் தலைவர்.. தம்பி விஜய் அவர்களுக்கு.. தாங்கள் பதிவு செய்திருக்கின்ற இரங்கல் செய்தி. . எங்களுக்கு மன ஆறுதலை தருவதோடு.. என் தந்தையின் வாழ்க்கைக்கு பெருமை சேர்க்கும் அளவிற்கு கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறீர்கள் இரங்கல் செய்தி சொன்னதோடு. . தங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் சகோதரர் ஆனந்த் அவர்களை நேரில் அனுப்பி... எங்களோடு தங்கள் துக்கத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி... கட்சி, கொள்கைகள் கடந்து தாங்கள் காட்டும் அன்பிற்கு நன்றி....