மீண்டும் காதலியை கழற்றிவிட்ட ரன்பீர் கபூர் - இவருக்கு இதே வேலையா போச்சு அடுத்து யாரோ?

வியாழன், 19 மார்ச் 2020 (11:57 IST)
பாலிவுட் சினிமாவின் மிகச்சிறந்த நடிகராக வலம் ரன்பீர் கபூர் நடிகை ஆலியா பட்டை கைதொழுது வந்தார். அக்கட தேசத்து காதல் மன்னன் என கிசு கிசுக்கப்படும் இவர் சோனம் கபூர் , தீபிகா படுகோனே , கத்ரீனா கைஃப்  உள்ளிட்டோரை காதலித்து பிரிந்துள்ளார். கடைசியாக நடிகை ஆலியா பட்டை காதலித்து வந்தார்.

ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள விருக்கின்றனர் என பாலிவுட் திரையுலக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது இந்த காதல் ஜோடி பிரிந்து விட்டதாக கிசு கிசுக்கப்டுகிறது.

ஆலியா பாட் கடந்த 15ம் தேதி தனது 27வது பிறந்தநாளை கொண்டாடினார். அந்த பிறந்தநாள் பார்ட்டியில் அவரது சகோதரி மற்றும் நெருங்கிய தோழிகள் இருந்தனர். ஆனால், ரன்பிர் கபூர் கலந்து கொள்ளவில்லை. எனவே இவர்கள் இருவரும் பிடித்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இது வெறும் வதந்தி எனவும் இன்னும் இருவரும் காதலித்து வருகின்றனர் எனவும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் மேடையில் பேசியதை வடிவேலு தவறாக எடுத்துக் கொண்டார் – அப்படி என்ன பேசினார் விவேக் ?