Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

4 மாதங்கள் கழித்து ரீ எண்ட்ரி குடுத்த ஷாரூக்! – ரசிகர்கள் மகிழ்ச்சி!

Advertiesment
4 மாதங்கள் கழித்து ரீ எண்ட்ரி குடுத்த ஷாரூக்! – ரசிகர்கள் மகிழ்ச்சி!
, புதன், 19 ஜனவரி 2022 (15:07 IST)
பல்வேறு பிரச்சினைகள் காரணமாக நீண்ட காலமாக சமூக வலைதளங்களில் இருந்து விலகியிருந்த நடிகர் ஷாரூக்கான் தற்போது ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார்.

இந்தியில் பிரபலமான ஸ்டார் நடிகராக வலம் வருபவர் ஷாரூக் கான். பல்வேறு இந்தி படங்களில் நடித்துள்ள இவருக்கு இந்தியா முழுவதிலும் ரசிகர்கள் உள்ளனர். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பல கோடி பேர் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்கள் முன்னதாக ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது தொடர்பான சிக்கல்களால் சமூக வலைதளங்களில் பதிவிடுவதை ஷாரூக்கான் தவிர்த்தார். கடந்த 4 மாதங்களாக சமூக வலைதளங்களில் ஓய்வில் இருந்த ஷாரூக்கான் தற்போது தான் நடித்த எல்ஜி விளம்பரம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதை தொடர்ந்து ஷாரூக்கானை வரவேற்பதாக அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரிலிஸ் தேதியை நீக்கி புதிய போஸ்டர் வெளியிட்ட வீரமே வாகை சூடும் படக்குழு!