Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கபிலன் மட்டும்தான் வாத்தியாரை டபுள்ஸ் அடிப்பானா? – வைரலாகும் டான்சிங் ரோஸ் பகிர்ந்த புகைப்படம்!

கபிலன் மட்டும்தான் வாத்தியாரை டபுள்ஸ் அடிப்பானா? – வைரலாகும் டான்சிங் ரோஸ் பகிர்ந்த புகைப்படம்!
, செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (12:13 IST)
சார்பட்டா பரம்பரையின் ட்ரெண்டாகும் மீம் ஸ்டைலில் டான்சிங் ரோஸ் நடிகர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகியுள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து சமீபத்தில் வெளியான படம் சார்பட்டா பரம்பரை. ஆங்கில குத்துசண்டை போட்டியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம் அமேசான் ப்ரைமில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

அதை தொடர்ந்து அந்த படத்தில் ரங்கன் வாத்தியாரை கபிலன் சைக்கிளில் வைத்து அழைத்து செல்லும் காட்சி மீம் மெட்டீரியலாக மாறி வைரலாகியுள்ளது. அதில் பலரது முகங்களையும் இணைத்து, வாகனத்தை மாற்றி என பல்வேறு மீம்களால் சமூக வலைதளங்களை நெட்டிசன்கள் கலக்கி வருகின்றனர்.

இந்நிலையில் அப்படத்தில் டான்சிங் ரோஸாக நடித்த ஷபீர் கல்லரக்கல், அதில் துரைக்கண்ணு வாத்தியாராக நடித்த ஜி.எம்.சுந்தரை சைக்கிளில் அழைத்து செல்லும் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் “வாங்கோ வாத்தியாரே நாமளும் ஊர சுத்தி வரலாம்!!!” என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எக்ஸ் டார்ச்சர் தாங்க முடியல - அபேஷ்க் பச்சனை அவசரமாக கரம்பிடித்த ஐஸ்வர்யா ராய்!