சில தினங்களாக நடிகர் கார்த்திக் பற்றி பல விஷயங்கள் சோசியல் மீடியாக்களில் பேசப்பட்டு வருகின்றன. அதற்கு முக்கிய காரணம் நடிகரும் இயக்குனருமான பாரதிகண்ணன் கார்த்திக் பற்றி அவருடைய அனுபவங்களை பகிர்ந்ததன் விளைவுதான். கார்த்திக்கால் எத்தனை தயாரிப்பாளர்கள் அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்தார்கள்? யாரெல்லாம் கஷ்டப்பட்டார்கள் என்பதை பற்றி கூறியிருந்தார்.
இந்த சம்பவத்தை பற்றி பிரபல மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலுவும் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதாவது கௌதம்மேனன் என்னை அறிந்தால் படத்தில் முதலில் அருண்விஜய்க்கு பதிலாக கார்த்திக்கைத்தான் கமிட் செய்திருந்தாராம். இதை அஜித்திடம் சொல்ல, இது மிகவும் டஃபான கேரக்டர். கார்த்திக் செட்டாகமாட்டார் என்று அஜித் சொன்ன பிறகுதான் அருண் விஜய் கதைக்குள் வந்தார். ஆனால் படம் பார்த்த பிறகு அருண்விஜய் கேரக்டரில் கார்த்திக் நடித்திருந்தால் கண்டிப்பாக அந்த கேரக்டர் இந்தளவு பேசப்பட்டிருக்காது.
கார்த்திக்கை அஜித் வேண்டாம் சொன்னதுக்கு ப்ளாஷ்பேக்கில் ஒரு கதையே இருக்கிறதாம். ஆனந்த பூங்காற்றே படத்தில் கார்த்திக் மற்றும் அஜித் நடித்திருப்பார்கள். அந்தப் படத்தின் பூஜை போட்டபிறகு அஜித்துக்கு ஆப்ரேஷன் நடந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். படத்தை உடனே ஆரம்பிக்கவேண்டும். அந்த நேரத்தில் கார்த்திக்தான் அஜித்துக்கு பதிலாக பிரசாந்தை போட சொன்னாராம்.
ஆனால் அஜித் எப்படியோ கஷ்டப்பட்டு அந்தப் படத்தில் நடித்துக் கொடுத்தார். இந்த விஷயம் பின்னாளில்தான் அஜித்துக்கு தெரியவந்ததாம். இதை மனதில் வைத்துக் கொண்டுதான் அஜித் என்னை அறிந்தால் படத்தில் கார்த்திக்கை வேண்டாம் என சொல்லியிருக்கக் கூடும் என செய்யாறு பாலு கூறியுள்ளார். ஆனந்த பூங்காற்றே சமயத்தில் கார்த்திக் சீனியர் நடிகர். அஜித் அப்போதுதான் வளர்ந்து வரும் நடிகர்.
கார்த்திக் நினைத்திருந்தால் வளர்ந்து வரும் நடிகர், அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றுதான் யோசித்திருக்க வேண்டும். அதை விட்டு அஜித்துக்கு பதில் பிரசாந்தை நடிக்க சொன்னதுதான் அஜித்துக்கு வருத்தத்தை தந்திருக்கும் என செய்யாறு பாலு கூறியுள்ளார்.