Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எனது கையில் ப்ளேடாக கிழித்தார்கள்! ரசிகர்கள் போர்வையில் விஷமிகள்! - அஜித் சொன்ன அதிர்ச்சி சம்பவம்!

Advertiesment
ajithkumar

Prasanth K

, சனி, 1 நவம்பர் 2025 (14:11 IST)

சினிமாவில் ரசிக மனப்பான்மையால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து நடிகர் அஜித்குமார் பேசியுள்ளது வைரலாகியுள்ளது.

 

சமீபத்தில் ஆங்கில சேனல் ஒன்றுக்கு நடிகர் அஜித்குமார் அளித்துள்ள பேட்டி வைரலாகியுள்ளது. அதில் கரூரில் நடந்த கூட்டநெரிசல் பலி சம்பவத்திற்கு குறிப்பிட்ட ஒருவர் மட்டுமே காரணமில்லை என்றும், ஒவ்வொருவர் மீதும் தனிப்பட்ட தவறுகள் உள்ளதாகவும், சமூகத்தின் ஒட்டுமொத்த தவறாகவும் அதை பார்ப்பதாக சொன்னார்.

 

மேலும் முதல் நாள் முதல் காட்சி ரசிகர் ஷோ குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்திய அவர் “நம்மை சுற்றியிருக்கும் கூட்டத்தில் எல்லாருமே நமது ரசிகர்களாக இருக்க வேண்டும் என்பதில்லை. 2005ல் ஒருமுறை காரில் சென்றபோது கதவை திறந்து ரசிகர்களுக்கு கை காட்டினேன். அதன்  பின்னர் என் கைகளில் ரத்தக்காயங்கள் இருந்தன. யாரோ ப்ளேடால் கையை கிழித்திருக்கிறார்கள்” என பேசியுள்ளார். ரசிக மனப்பான்மையினால் ரசிகர்களுக்கும், நடிகர்களுக்கும் ஏற்படும் அபாயங்கள் குறித்து அஜித்குமார் வெளிப்படையாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லிங்குசாமி இயக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக ருக்மிணி வசந்த்…!