Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆயிரத்தில் ஒருவன் 2 வில் தனுஷ்& கார்த்தி… இயக்குனர் செல்வராகவன் பகிர்ந்த தகவல்!

Advertiesment
selvaragavan

vinoth

, ஞாயிறு, 6 ஏப்ரல் 2025 (09:12 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான செல்வராகவன் இயக்கத்தில் உருவாக்கிய சாகச திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன்ம். அந்த படம் ரிலீஸின் போது பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் இப்போதுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிரது. இந்நிலையில்  செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் படத்தின்  இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாக தகவல் தெரிவித்து, இதன் போஸ்டரை சில ஆண்டுகளுக்கு முன்னர் செல்வராகவன் வெளியிட்டார்.

ஆனால் இதுவரை அந்த படம் குறித்த மேலதிக தகவல் எதுவும் வெளியாகவில்லை. அதுமட்டுமில்லாமல் செல்வராஜவனின் படங்கள் கமர்ஷியலாக வெற்றி பெறுவதில்லை. அதனால் அவரை நம்பி தற்போது தயாரிப்பாளர்கள் வரமாட்டார்கள் எனவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ள செல்வராகவன் “ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தை இயக்க வெறித்தனமாகக் காத்திருக்கேன். அந்த படத்தை தனுஷை வைத்து எடுப்பதாக அறிவித்தோம். ஆனால் கார்த்தி இல்லாமல் அந்த படத்தைத் தொடங்க முடியாது. ஒரு வருடம் நடிகர்கள் கால்ஷீட் தேவைப்படுகிறது.” எனக் கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நேரத்தில் ஓடிடி மற்றும் தொலைக்காட்சியில் ரிலீஸாகும் ஜி வி பிரகாஷின் ‘கிங்ஸ்டன்’!