இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜி. வி. பிரகாஷ் குமாரின் 25 ஆவது படமாக 'கிங்ஸ்டன்' நேற்று ரிலீஸானது. படத்தில் திவ்யபாரதி, குமரவேல், ஆண்டனி மற்றும் சேத்தன் ஆகியோர் நடிக்கின்றனர். கமல் பிரகாஷ் இயக்க கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி வி பிரகாஷே இசையமைக்கிறார்.
கடலை மையமாக வைத்து ஒரு ஹாரர் த்ரில்லர் கதையாக கிங்ஸ்டன் உருவானது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த படத்தை ஜி வி பிரகாஷே தயாரித்திருந்தார். படம் கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் செலவில் உருவானதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் படம் ரிலீஸானது முதல் நெகட்டிவ் விமர்சனங்களாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. படத்தில் பேயைக் காட்டினால் பயம் வரணும். சிரிப்பு வரக் கூடாது என நெகட்டிவ்வான ட்ரோல் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. அதே போல ரசிகர்களையும் பெரியளவில் இந்த படம் திரையரங்குக்குள் இழுக்கவில்லை. இந்நிலையில் இந்த படம் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி ஆகியவற்றில் ஒரே நேரத்தில் ரிலீஸாகவுள்ளது. ஏப்ரல் 13 ஆம் தேதி ஜி 5 ஓடிடி தளத்தில் இந்த படத்தில் வெளியாகவுள்ள நிலையில், அதே நாளில் ஜி தமிழ் தொலைக்காட்சியிலும் ரிலீஸாகிறது.