Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இயக்குனர் செல்வராகவனுக்கு ஆண் குழந்தை: ரசிகர்கள் வாழ்த்து!

Advertiesment
இயக்குனர் செல்வராகவனுக்கு ஆண் குழந்தை: ரசிகர்கள் வாழ்த்து!
, வியாழன், 7 ஜனவரி 2021 (16:02 IST)
பிரபல இயக்குனர் செல்வராகவனுக்கு சற்று முன்னர் ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், இதனையடுத்து அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 
 
செல்வராகவன் நடிகை சோனியா அகர்வாலை கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து அதன்பின் அவரை விவாகரத்து செய்தார். இதனையடுத்து கடந்த 2011 ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட செல்வராகவனுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர்
 
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கீதாஞ்சலி மீண்டும் கர்ப்பம் அடைந்தார். இந்த நிலையில் சற்று முன்னர் கீதாஞ்சலிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், தாயும் சேயும் நலம் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த ஆண் குழந்தைக்கு செல்வராகவன் கீதாஞ்சலி தம்பதியினர் ரிஷிகேஷ் என்று பெயர் வைத்துள்ளதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளனர். இதனை அடுத்து செல்வராகவனின் மூன்றாவது குழந்தையான ரிஷ்கேஷூக்கு திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் செல்வராகவன் தனுஷ் நடிக்கவிருக்கும் இரண்டு படங்களை அடுத்தடுத்து இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் விஜய் போலீஸில் புகார் ...