Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனுஷ் , செல்வராகவன் இணையும் படத்தின் முக்கிய அப்டேட்...தயாரிப்பாளர் புகழாரம் !

Advertiesment
தனுஷ் , செல்வராகவன் இணையும்  படத்தின் முக்கிய அப்டேட்...தயாரிப்பாளர் புகழாரம் !
, செவ்வாய், 5 ஜனவரி 2021 (17:21 IST)
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ’ஆயிரத்தில் ஒருவன்’. தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளிவந்த இந்தத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இதன் இரண்டாவது பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அவரை நச்சரித்து வந்தனர்.

இந்நிலையில் 10 ஆண்டுகள் கழித்து ’ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்தின் அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது. இயக்குனர் செல்வராகவன் தனது டுவிட்டர் பக்கத்தில் ’ஆயிரத்தில் ஒருவன்’ இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறார்.
ஆயிரத்தின் ஒருவன் படத்தில் முதல் பாகத்தில் கார்த்தி, பார்த்திபன், ரியாசென், ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் கார்த்திக்கு பதிலாக தனுஷ் நடிக்க இருப்பதாக அவர் அறிவித்துள்ளார். மேலும் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் இந்த படம் 2024 ஆம் ஆண்டு வெளிவரும் எனச் செல்வராகவன்  கூறியுள்ளார்.

இதில் தான் பிரச்சனையே ஆரம்பமாகியுள்ளது. செல்வராகவன் வெளியிட்டுள்ள ஆயிரத்தில் ஒருவர் -2 பாகம் படத்தின் போஸ்டர் Mathieu lauffray என்ற புத்தகத்தின் அட்டைப்படம் போன்று இருப்பதாக நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், செல்வராகவன் 8 வது முறையாக இணையும் ஒப்படத்திற்கு எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தற்போது, இப்படத்தின் புகைப்படப் பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளதாக செல்வராகவன் மற்றும் தனுஷ் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து செல்வராகவன் கூறும்போது, என்னுடைய உலகத்திற்குத் திரும்பிவிட்டேன் எனவும் இது எனது 12 வது படம் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு கூறும்போது, இந்தியாவின் சிறந்த இயக்குநருடன் இணைந்து பணிபுரிவதில் பெருமை கொள்கிறேன். காலத்தால் அழியாத படங்கள் கொடுத்தவர் இன்று முதல் புகைப்படப் பணிகள் தொடங்குகிறது எனத் தெரிவித்துள்ளார்.  இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை சித்ராவின் கணவர் மீண்டும் கைது !