பலத்த எதிர்பார்ப்புகளுக்கு கடந்த ஆண்டு ரிலீஸ் ஆனது ஆதிபுருஷ் திரைப்படம். ஓம் ராவத் இயக்கிய இந்த படத்தில் பிரபாஸ், கீர்த்தி சனோன் மற்றும் சைஃப் அலிகான் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். ஆனால் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடுமையான விமர்சனங்களையும் ட்ரோல்களையும் இந்த படம் எதிர்கொண்டுள்ளது.
இந்த நிலையில் இந்த படம் சில மாதங்களுக்குப் பின்னர் ஓடிடியில் திடீரென எந்தவிதமான விளம்பரமும் இன்றி வெளியானது. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் அமேசான் பிரைம் தளத்திலும் இந்தி மட்டும் நெட்பிளிக்ஸ் தளத்திலும் ஒளிபரப்பாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்போதும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது.
இந்நிலையில் சமீபத்தில் இந்த படம் பற்றி பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் “ஆதிபுருஷ் படம் பார்த்த பின்னர்தான், கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்பது எனக்குப் புரிந்தது” என நக்கலடித்துள்ளார்.