Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கல்கி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்த பிரபல ஓடிடி!

கல்கி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்த பிரபல ஓடிடி!

vinoth

, சனி, 17 ஆகஸ்ட் 2024 (09:54 IST)
பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள கல்கி திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்க நாக் அஸ்வின் இயக்கினார். இரண்டு பாகங்களாக உருவான இந்த படத்தின் முதல் பாகம் ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியை ருசித்துள்ளது.

சயின்ஸ்பிக்‌ஷன் கதையை புராண இதிகாசமான மகாபாரதத்தோடு இணைக்கும் கதையாக கல்கி படத்தை உருவாக்கி இருந்தார் நாக் அஸ்வின். கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இந்த படம் நல்ல வசூலை தொடக்கம் முதலே பெற்று வந்தது. இப்போது வரை இந்த திரைப்படம் 1100 கோடி ரூபாய் அளவுக்கு திரையரங்குகள் மூலமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.

இந்நிலையில் இப்போது படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி தென்னிந்திய மொழிகளில் ப்ரைம் வீடியோவில் இந்த படம் ஆகஸ்ட் 22 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்தியில் அதே தேதியில் நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரசாந்துக்கு எப்போ கல்யாணம்?... ரவிக்குமார் கேட்ட கேள்விக்கு தியாகராஜனின் எமோஷனல் பதில்!