Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கல்கி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

கல்கி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

vinoth

, புதன், 14 ஆகஸ்ட் 2024 (13:54 IST)
பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள கல்கி திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்க நாக் அஸ்வின் இயக்கினார். இரண்டு பாகங்களாக உருவான இந்த படத்தின் முதல் பாகம் ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியை ருசித்துள்ளது.

கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இந்த படம் நல்ல வசூலை தொடக்கம் முதலே பெற்று வந்தது. இப்போது வரை இந்த திரைப்படம் 1100 கோடி ரூபாய் அளவுக்கு திரையரங்குகள் மூலமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.

இந்த படம் ரிலீஸாகி இரண்டு மாதங்கள் ஆகும் நிலையில் தற்போது படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி தமிழ், மலையாள்ம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ரிலீஸாகவுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் சாரிடம் கதை சொல்லப் போய் சொதப்பிவிட்டேன்… டிமாண்டி காலணி இயக்குனர் பகிர்ந்த தகவல்!