பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஜிபி முத்து குறித்து பிரபல இயக்குனர் சீனு ராமசாமி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ள கருத்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட நிலையில் ஒரே வாரத்தில் தன்னுடைய மகனை பார்க்க வேண்டும் என்று ஜி பி முத்து அடம் பிடித்து பிக் பாஸ் மற்றும் கமல்ஹாசனிடம் விடைபெற்றுக்கொண்டு போட்டியில் இருந்து வெளியேறினார்
இது குறித்து பல்வேறு விதமான விமர்சனங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் பிரபல இயக்குனர் சீனு ராமசாமி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது
ஒரு போட்டியாளன்,
அதன் வருமானம்
வெகுமானம்
யாவற்றையும்
பணிவோடு வேண்டாமென துறந்து விட்டு
தன் மகனுக்காக
புகழ் வாய்ந்த சபையில்
உலகறிந்த நடிகர் கேட்டும்
கேளாமல் #bigbosstamil6 லிருந்து
விடைபெற்ற
தமிழ்மகன்
#GPமுத்து தான் தீபாவளியின்
வெற்றி நாயகன்
Edited by Mahendran