Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டுவிட்டர் வீடியோவை நீக்கியது குறித்து ரஜினிகாந்த் விளக்கம்

Advertiesment
டுவிட்டர் வீடியோவை நீக்கியது குறித்து ரஜினிகாந்த் விளக்கம்
, ஞாயிறு, 22 மார்ச் 2020 (18:27 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று கொரோனா விழிப்புணர்வு குறித்தும், இன்று நடைபெறும் சுய ஊரடங்கிற்கு ஆதரவு கொடுப்பது குறித்தும் ஒரு வீடியோவை பதிவு செய்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலானது. ஆனால் இந்த வீடியோவை திடீரென டுவிட்டர் இந்தியா நீக்கிவிட்டது.
 
இந்த நிலையில் தன்னுடைய வீடியோவை டுவிட்டர் இந்தியா நீக்கிய நிலையில் இதுகுறித்து ரஜினிகாந்த் விளக்கம் அளித்து ஒரு பதிவை செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது
 
நேற்று பதிவு செய்த காணொளியில் 12 முதல் 14 மணி நேரம் மக்கள் வெளியில் நடமாடமல் இருந்தாலே கொரோனா வைரஸ் பரவுவது தடைபட்டு, சூழல் மூன்றாம் நிலைக்கு செல்வதை தவிர்க்கலாம் என்று நான் கூறியிருந்தால், அது இன்று மட்டும் அப்படி இருந்தாலே போதும் என்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டு அதிகம் பகிரப்பட்டது. இதனால் டுவிட்டர் நிர்வாகம் அதை நீக்கி உள்ளது.
 
நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அரசு பரிந்துரைக்கும் காலம் வரை இன்று போலவே சுய தனிமைப்படுத்துதலை நாம் கவனமாக பின்பற்றி இந்த கொடிய வைரஸை வீழ்த்துவதற்கான முயற்சியில் கவனத்தைச் செலுத்துவோம் இவ்வேளையில் என்னுடைய காணொளியின் நோக்கத்தை புரிந்துகொண்டு, ஆதரித்து மக்களிடம் பதிவை சரியான முறையில் கொண்டு சேர்த்த அனைவருக்கும் நன்றி. 
 
இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாஸ்டர் ட்ரைலர் இன்று ரிலீஸ்? அவசர அறிவிப்பை வெளியிட்டது படக்குழு!