நாடு முழுவதும் கொரோனா பொதுமுடக்கத்தால் பலர் வீடுகளில் உள்ள நிலையில் பிரபலங்கள் வெளியிடும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் முடங்கியுள்ள சினிமா பிரபலங்கள் அவ்வபோது ரசிகர்களுக்காக சில வீடியோக்களை வெளியிடுவது, லைவ் சாட் செய்வது போன்றவற்றை செய்து வருகின்றனர்.
தமிழில் மீகாமன், காப்பான் போன்ற படங்களில் நடித்த நடிகை சாய்ஷா நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். எனினும் படங்களில் நடிப்பது போன்றவற்றை தொடர்ந்து வருகிறது. நடனம் ஆடுவதில் சாய்ஷாவுக்கு விருப்பம் அதிகம் என்பதால் வீட்டில் இருந்தபடிக்கே டான்ஸ் ஆடி வீடியோ ஒன்றை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் வெகுவாக பாராட்டி ஷேர் செய்து வருகின்றனர்.