Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகளின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்ட பிக் பாஸ் பிரபலம்!

மகளின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்ட பிக் பாஸ் பிரபலம்!
, செவ்வாய், 30 ஜூன் 2020 (13:43 IST)
கடந்த 2017 ம் ஆண்டு க‌மல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமானவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன். ஆரம்பத்தில் மாடல் துறையில் பணியாற்றி பல்வேறு விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் "அபியும் நானும்"படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 'உன்னைப் போல் ஒருவன்', 'கோ' உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்கள் மத்தியில் பரீட்சியமனார் .

தொலைக்காட்சி தொகுப்பாளினி மற்றும் சின்னத்திரை நடிகையுமான‌ நிஷாவை நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியபோது காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி சில வருடங்கள் கடந்த நிலையில் இந்த தம்பதியினருக்கு சமைரா என்ற அழகிய பெண்குழந்தை பிறந்தது.

இந்நிலையில் தற்ப்போது மகள் சமைராவின் முதல் பிறந்தநாளை கணேஷ் - நிஷா தம்பதியினர் கொண்டாடியுள்ளனர். பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு சமைராவிற்கு வாழ்த்துக்கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்ததுடன் "இந்த பிறந்தநாள் முதல் தன் மகள் சிறகடித்து பறக்க உந்தித்தள்ளும் காற்றாக இருக்க விரும்புகிறேன்" என  எமோஷனலாக பதிவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா வைரஸ் எதிரொலி: ராமோஜிராவ் பிலிம்சிட்டி எடுத்த அதிர்ச்சி முடிவு