Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சத்தியமா விடவே கூடாது: கொந்தளித்த ரஜினிகாந்த்

சத்தியமா விடவே கூடாது: கொந்தளித்த ரஜினிகாந்த்
, புதன், 1 ஜூலை 2020 (12:26 IST)
சத்தியமா விடவே கூடாது: கொந்தளித்த ரஜினிகாந்த்
சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் குறித்து தமிழ் திரையுலகமே கொந்தளித்து ஆவேசமாக கருத்துக்களை தெரிவித்து வந்ததை அவ்வப்போது பார்த்து வந்தோம். குறிப்பாக கமலஹாசன் தினமும் தன்னுடைய டுவிட்டரில் இதுகுறித்து டுவிட்டுகளை பதிவு செய்து வருகிறார். சூர்யா மற்றும் ராஜ்கிரன் ஆகியோர் நீண்ட பதிவுகளை இது குறித்து ஆவேசமாக தெரிவித்தனர் 
 
இந்த நிலையில் சற்று முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது டுவிட்டரில் இந்த சம்பவம் குறித்த தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ’தந்தையையும் மகனையும் சித்திரவதை செய்து மிருகத்தனமாக கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும் பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆகவேண்டும். விடக்கூடாது’ என்று கூறியுள்ளார்
 
சத்தியமாக விடவே கூடாது என்ற தலைப்பில் ரஜினிகாந்த் பதிவு செய்துள்ள இந்த ட்விட் ஒரு சில நிமிடங்களில் ஆயிரக்கணக்கான லைக்ஸ் மற்றும் ரிடுவிட்டுக்களை பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இருக்கு அட்டகாச ட்ரீட்! – சந்தோஷ் நாராயணன் ட்வீட்!