மீண்டும் இணையும் ‘பிச்சைக்காரன்’ படக் கூட்டணி… டைட்டில் அறிவிப்பு!

vinoth
புதன், 10 செப்டம்பர் 2025 (14:52 IST)
தமிழ் சினிமாவில் சுக்ரன் படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதன் பின்னர் அவர் வரிசையாகப் பல ஹிட் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம்வந்தார். இதற்கிடையில் அவர் திடீரென ‘நான்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்த படம் ஹிட்டானதை தொடர்ந்து அவர் தொடர்ந்து நடிகராக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

அவரது படங்கள் சமீபகாலமாக எதிர்மறை விமர்சனங்களையும் வணிக ரீதியாக தோல்வியையும் பெற்று வருகின்றன. அதனால் தற்போது மீண்டும் தற்போது படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கியுள்ளார். அவர் நடிப்பில் செப்டம்பர் 19 ஆம் தேதி “சக்தி திருமகன்” திரைப்படம் ரிலீசாகவுள்ளது.

இதையடுத்து தனக்குப் ‘பிச்சைக்காரன்’ என்ற சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குனர் சசி இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்துக்கு “நூறுசாமி” என்று டைட்டில் வைக்கபப்ட்டுள்ளது. படம் அடுத்த ஆண்டு மே மாதம் ரிலீஸாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மகுடம் இயக்குநர் விலகல்? மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கும் விஷால்? - பரபரப்பு தகவல்!

மகாபாரதத்தின் 'கர்ணன்' நடிகர் பங்கஜ் தீர் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

கைவிடப்பட்டதா லிங்குசாமியின் ‘பையா 2’ திரைப்படம்?

அக்மார்க் தீபாவளி எண்டர்டெயினர் படம்… ‘டியூட்’ படம் குறித்து மமிதா நம்பிக்கை!

தமன்னாவின் அழகை ஓவராக வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய மூத்த நடிகர்!

அடுத்த கட்டுரையில்
Show comments