Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சினிமாக்காரர்கள் தவறு செய்தால் தேசத்துரோகிகள் போல பேசுகிறார்கள்… இயக்குனர் பேரரசு காட்டம்!

Advertiesment
ஸ்ரீகாந்த்

vinoth

, செவ்வாய், 8 ஜூலை 2025 (13:47 IST)
போதை பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் சமீபத்து கைது செய்யப்பட்டது தமிழ்த் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஸ்ரீகாந்த் கொக்கைன் எனும் போதை பொருளை வாங்கி பயன்படுத்தியது தெரியவர விசாரணைத் தொடங்கியது.

ஸ்ரீகாந்த் மூலமாக கிருஷ்ணாவும் போதைப் பொருளைப் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூலமாக மேலும் பலர் திரையுலகில் போதைப் பொருட்களை வாங்கி பயன்படுத்தி இருக்கலாம் என தகவல்கள் பரவி வருகின்றன. மேலும் சிலரோ தமிழ் சினிமாவில் பெரும்பாலானவர்கள் போதைப் பொருட்களைப் பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்கள் என்று பரபரப்பாகப் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் பேரரசு இதுபற்றி பேசும்போது “சினிமாக்காரர்கள் போதை பொருள் பயன்படுத்தி மாட்டினால் தேசத் துரோகம் செய்தது போல காட்டுகின்றனர். சமூகவலைதளங்களில் இருக்கும் நிறைய மிருகங்கள் வன்மத்தைக் கொட்டுகிறார்கள்.” என கோபமாகப் பேசியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாழ்க்கை என்னவென்று உணரவிரும்பினல்… இயக்குனர் ராமின் ‘பறந்து போ’ படத்தைப் பாராட்டிய நயன்தாரா!