Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நயன்தாரா இயக்குனருடன் இணையும் பிரியா பவானி சங்கர்!

நயன்தாரா இயக்குனருடன் இணையும் பிரியா பவானி சங்கர்!
, திங்கள், 5 ஏப்ரல் 2021 (16:19 IST)
நடிகை பிரியா பவானி சங்கர் ஐரா இயக்குனர் சர்ஜுன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம்.

தமிழ் ரசிகர்களுக்கு செய்தி வாசிப்பவராக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை தொடரில் நடித்து பிரபலமானார் பிரியா பவானி சங்கர். ஒரு காலத்தில் சின்னத்திரை நடிகைகள் சினிமாவுக்குள் நுழைவது கடினமாக இருந்த நிலையில் அதை பொய்யாக்கும் விதமாக சினிமாவிலும் நுழைந்து வெற்றிகரமான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது குருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இப்போது 10 படங்களுக்கு மேல் கைவசம் வைத்துள்ள அவர் முதல் முதலாக மையக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். நயன்தாராவை வைத்து ஐரா என்ற படத்தை இயக்கிய சர்ஜுன் அந்த படத்தை இயக்க உள்ளாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீவிர தேர்தல் பிரச்சாரம்… அதிக தூரம் பயணம் செய்த தலைவர் யார்?