Publish Date: Mon, 05 Apr 2021 (13:19 IST)
Updated Date: Mon, 05 Apr 2021 (13:27 IST)
தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில் ஐந்து தொகுதிகளில் பணப் பட்டுவாடா அதிகமாக இருப்பதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது சம்மந்தமாக தேர்தல் ஆணையரை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கொளத்தூர், சேப்பாக்கம், திருச்சி மேற்கு, காட்பாடி, திருவண்ணாமலை தொகுதிகளில் அதிக பணப்பட்டுவாடா நடைபெறுவதாக குற்றச்சாட்டை வைத்து அந்த ஐந்து தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்யவேண்டும் என மனு அளித்துள்ளார்.
webdunia
Publish Date: Mon, 05 Apr 2021 (13:19 IST)
Updated Date: Mon, 05 Apr 2021 (13:27 IST)