Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அட்லி-ஷாருக்கான் படத்தில் நயன்தாராவை அடுத்து இணைந்த இன்னொரு நடிகை!

அட்லி-ஷாருக்கான் படத்தில் நயன்தாராவை அடுத்து இணைந்த இன்னொரு நடிகை!
, செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (18:22 IST)
ஷாருக்கான் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் அட்லி இயக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் ஷாருக்கான் ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது
 
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் மேலும் ஒரு நாயகி இணைந்து இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் அதில் ஒரு வேடத்தில் நடிக்கும் ஷாருக்கானுக்கு நயன்தாரா ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நடிக்கும் இன்னொரு ஷாருக்கான் கேரக்டருக்கு சானியா மல்ஹோத்ரா என்பவர் நடிக்க இருப்பதாக தெரிகிறது. இவர் ஏற்கனவே அமீர்கானின் ’தங்கல்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வரிக்கு வட்டி விவகாரம்: மேல்முறையீடு செய்யும் சூர்யா!