தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் சந்தோஷ் நாராயணன். குறும்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்குள் பிரவேசித்த பல இயக்குனர்களின் படங்களுக்கு இசையமைத்து பின்னர் ரஜினியின் காலா மற்றும் கபாலி ஆகிய படங்களுக்கு இசையமைத்து பிரபலமானார். தற்போது தமிழைத் தாண்டியும் தெலுங்கு சினிமாவிலும் கால்பதித்து கலக்கி வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த சூதுகவ்வும் 2 படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசும்போது “சிவா எனக்கு நெருங்கிய நண்பராக இருந்தார். நான் இசையமைப்பாளர் ஆக முயற்சி செய்து கொண்டிருந்த போது சிவாதான் மோட்டிவேஷனாக பேசுவார். என் அப்பா அம்மாவிடம் எல்லாம் நான் பெரிய இசையமைப்பாளராக வருவார் என பேசுவார்.
முதலில் அவரின் தமிழ்ப் படத்துக்கு இசையமைத்தேன். ஆனால் என் பாடல்கள் அவருக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவர்கள் நீயாகவே இந்த படத்தில் இருந்து ஓடிடு என்பது மாதிரி சொன்னார்கள். அதனால் நான் அந்த படத்தில் இருந்து வெளியேறினேன்.” எனப் பேசியுள்ளார்.