Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சந்தானம் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சந்தானம் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
, வியாழன், 21 ஜனவரி 2021 (07:59 IST)
சந்தானம் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து தற்போது தமிழ் திரையுலகில் ஹீரோவாக மாறி இருப்பவர் நடிகர் சந்தானம். இன்று அவர் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் நடித்து வரும் திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
சந்தானம் நடித்து வரும் பாரீஸ் ஜெயராஜ் என்ற திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் நடித்து வரும் மற்றொரு படத்திற்கு சபாபதி என்ற டைட்டில் அறிவிக்கப்பட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது 
 
மேலும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் உடன் வெளிவந்துள்ள இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாசராவ் இயக்கியுள்ள இந்த படத்தில் சந்தானத்துடன் எம்எஸ் பாஸ்கர் மற்றும் சாயாஜி ஷிண்டே முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர் இந்த படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்
 
இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் வரும் ஏப்ரல் மாதம் இந்த படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று சந்தானத்தின் பிறந்தநாளை அடுத்து திரையுலகினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பூஜையுடன் தொடங்கிய லூசிபர் படப்பிடிப்பு – வெளியான புகைப்படங்கள்!