Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகர் சந்தானத்தின் ’’பாரிஸ் ஜெயராஜ்’’ பட டிரைலர் ரிலீஸ்

நடிகர் சந்தானத்தின் ’’பாரிஸ் ஜெயராஜ்’’ பட டிரைலர் ரிலீஸ்
, திங்கள், 18 ஜனவரி 2021 (17:58 IST)
நடிகர் சந்தானத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பாரிஸ் ஜெயராஜ் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

காமெடி நடிகரான சந்தானம் முன்னணி நடிகர்களுக்கு இணையான காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக புரமோஷன் ஆகி தொடர்ச்சியாக ஹீரோ வேடங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடித்த திரைப்படங்கள் நல்ல வெற்றியைப் பெற்று வருகின்றன. இந்நிலையில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ளபாரிஸ் ஜெயராஜ் படத்தின் டிரைலர் தற்போது ரிலீஸாகியுள்ளது.
 

சந்தானம் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படங்களில் ஒன்று ‘பாரீஸ் ஜெயராஜ்’. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் , செகண்ட் லுக் போஸ்டர்சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் எப்போது இதன் டிரைலர் வெளியாகும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் ஏற்கனவே சிங்கில் ரிலீஸாகி பெரும்  வரவேற்பைப் பெற்றது. கானா பாடலான இது வைரலானது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலரை நடிகர் சந்தானம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வைரலாகி வருகிறது. சந்தானத்திற்கு இப்படம் பெரும் வெற்றியாக அமையும் எனப் பலரும் கருத்து தெரிவித்து அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இப்படத்தின் trailor லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’’கனவு நிறைவேறியது...’’.மணிரத்னம் படத்தில் யோகி பாபு